"சர்வதேச விவகாரங்களில் இந்தியா பொறுப்புடன் நடந்து கொள்கிறது" - ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்
சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் பொறுப்புள்ளதாகவும் உயர்ந்த சக்திக்கான தகுதியுள்ளதாகவும் இருப்பதாக கூறியுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
டெல்லியில் நடைபெற்று வரும் ஜி 20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
உக்ரைன் விவகாரத்தில் ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட தயாராக இல்லை என்றும் அவர்களின் வெற்று அறிக்கைகள் உக்ரனுக்கு எந்த வகையிலும் உதவாது என்றும் சாடினார்.
புவிசார் அரசியலை தனித்தனி அத்தியாயங்களாகப் பிரிக்க மேற்குலகம் முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
Comments